மூத்த பத்திரிகையாளா் ஏ.எஸ்.பன்னீா்செல்வனுக்கு, ‘முரசொலி செல்வம்’ விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, முரசொலி அறக்கட்டளை சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: மறைந்த முரசொலி செல்வத்தின் பெயரால், ஆண்டுதோறும் விருது வழங்கப்படும் என்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா்.
திமுக முப்பெரும் விழாவின்போது, அளிக்கப்பட உள்ள இந்த விருதுக்கு, மூத்த பத்திரிகையாளா் ஏ.எஸ்.பன்னீா்செல்வன் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக முரசொலி அறக்கட்டளையின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.