தமிழ்நாடு

கமல்ஹாசனுக்கு மட்டும் ‘எக்ஸ்ட்ரா’ இசை! இளையராஜாவுக்கு ரஜினி புகழாரம்!

திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் புகழாரம்

இணையதளச் செய்திப் பிரிவு

இசையமைப்பாளர் இளையராஜாவின் 50 ஆண்டு திரைத்துறை பயணத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டுத் தெரிவித்தார்.

இசையமைப்பாளர் இளையராஜா திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததைத் தொடர்ந்து, அவருக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில்,

“நான் கண்ணால் பார்த்த அதிசய மனிதர் - இளையராஜா. உலகத்தில் வாழும் அனைத்து தமிழர்களின் ரத்தம், நாடி, உயிரிலும் இளையராஜாவின் இசை கலந்துள்ளது. 50 வருடங்களில் 1,600 படங்கள், 8,000 பாடல்கள் என்பது சாதாரண விஷயமல்ல.

எல்லோருக்கும் ஒரே மாதிரிதான் என்று சொல்வார். ஆனால், கமலஹாசனுக்கு மட்டும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா. சகோதரருக்கு சிந்தாத கண்ணீர், மனைவிக்கு சிந்தாத கண்ணீர், மகளுக்கு சிந்தாத கண்ணீர், நண்பர் எஸ்.பி.பி.க்கு சிந்தியது.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் துவங்கிய இந்நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நடிகர்கள் கமல் ஹாசன், பிரபு, கார்த்தி உள்பட பலரும் கலந்துகொண்டுள்ளனர்’’ என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க: அமுதே தமிழே எனதுயிரே... இளையராஜாவுடன் பாடிய கமல் ஹாசன்!

Ilaiyaraaja completes 50 years in industry

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுட்டால் பொன் சிவக்கும் சுடாமல் கண் சிவந்தேன்... திரிஷா ஷெட்டி!

வாக்குகளுக்காக பிரதமர் மோடி மேடையில் நடனமும் ஆடுவார்: ராகுல் விமர்சனம்

ஊழல் வேட்கையில் இளைஞர்களின் வாழ்வை வேட்டையாடிய திமுக அரசு! - நயினார் நாகேந்திரன்

மீண்டும் முக்கோண காதல்... திருமாங்கல்யம் தொடரின் ஒளிபரப்பு தேதி அறிவிப்பு!

வயர்லெஸ் பவர் பேங்க்! போட் நிறுவனத்தின் புதிய அறிமுகம்

SCROLL FOR NEXT