முகப்பு
செய்திகள்

ரஜினி - 173 புரோமோ இசையமைப்பாளர் இவரா?

ரஜினி - 173 புரோமோ இசை குறித்து...

Updated On : 12 ஜனவரி 2026, 3:15 pm IST
ரஜினிகாந்த்
பகிர்:

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 173-வது திரைப்படத்தின் புரோமோ இசை கவனம் பெற்றுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த்தின் 173-வது திரைப்படத்தை இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கவுள்ளார். டான் படத்தைத் தொடர்ந்து ரஜினியுடன் இணைவதற்கான வாய்ப்பு சிபிக்கு கிடைத்தாலும் சில காரணங்களால் அப்படம் கைவிடப்பட்டது.

இருந்தும், சில ஆண்டுகள் கழித்து ரஜினி - சிபி கூட்டணியில் திரைப்படம் உருவாகவுள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

தலைவர் - 173 என்கிற பெயரில் வெளியான இவர்களின் திரைப்பட அறிவிப்பு புரோமோவில் இடம்பெற்ற பின்னணி இசை ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில் இப்படத்தின் இசையமப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டாலும் புரோமோவிற்கு 19 வயதான தேஜஸ் கிருஷ்ணா என்பவரே இசையமைத்துள்ளதாகத் தகவலகள் தெரிவிக்கின்றன.

இதனை அறிந்துகொண்ட ரசிகர்கள் சிலர், அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

summary

thalaivar - 173 promo musician

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments