கோப்புப் படம் 
தமிழ்நாடு

இரவில் 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 26 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 26 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு (இரவு 10 மணி வரை ) தூத்துக்குடி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், கோவை, தருமபுரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம், சிவகங்கை, திருச்சி, திருப்பூர், திருவண்ணாமலை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

இதேபோன்று, செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், தஞ்சை, அரியலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | இன்று முதல் 3 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை!

Rain chance for 26 districts of tamilnadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகாநதி தொடர் படப்பிடிப்புத் தளத்தில் நடந்த சண்டை! வைரல் விடியோ!!

அன்புமணி கட்சி உறுப்பினரே இல்லை; பொய்யும் புரட்டும் எடுபடாது: ராமதாஸ்

தமிழக அரசின் வால்வோ சொகுசுப் பேருந்து! கட்டணம் எவ்வளவு?

ஏபிடி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்த சூர்யவன்ஷி..! 574 ரன்கள் குவித்து வரலாறு படைத்த பிகார்!

என்டிஏ கூட்டணியில் 6 தொகுதிகள் ஒதுக்கீடு? - டிடிவி தினகரன் பதில்!

SCROLL FOR NEXT