சரத்குமார் | விஜய்  
தமிழ்நாடு

விஜய்க்கு கொள்கை, கோட்பாடு இல்லை; எனக்கும்தான் கூட்டம் வந்தது! - சரத்குமார்

தவெக தலைவர் விஜய் பற்றி நடிகரும் பாஜக நிர்வாகியுமான சரத்குமார் கருத்து...

இணையதளச் செய்திப் பிரிவு

உச்ச நடிகராக இருக்கும்போதுதான் தானும் அரசியலுக்கு வந்ததாகவும் 1996ல் தனக்கும் மாபெரும் கூட்டம் கூடியதாகவும் நடிகரும் பாஜக நிர்வாகியுமான சரத்குமார் கூறியுள்ளார்.

சென்னையில் பாஜக நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய சரத்குமார், தவெக விஜய் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது, "கொள்கை, கோட்பாடு இல்லாமல் எதிர்ப்பு அரசியலை மட்டும் கையில் எடுத்திருக்கிறார் விஜய். மக்களுக்கு நன்மை செய்வேன் என்று கூறுகிறார். ஆனால், என்ன செய்யப் போகிறார், புதுமையாக, புதிதாக எந்த திட்டத்தைச் செயல்படுத்தப் போகிறார் என்று இதுவரை சொல்லவில்லை.

நாங்கள் ஆட்சியமைப்போம் என்று சொல்வதற்கு அவருக்கு உரிமை இருக்கலாம். அதில் தவறு இல்லை. வார இறுதி நாள்களில் பிரசாரம் செய்கிறார். அதில் என்ன உத்தியைப் பயன்படுத்துகிறாரென்று தெரியவில்லை.

எல்லாருக்குமே கூட்டம் வரும். 1996ல் எனக்கும்தான் கூட்டம் கூடியது. அப்போதெல்லாம் சமூக வலைத்தளங்கள் கிடையாது. வேண்டுமானால் என்னிடம் உள்ள காணொளிக் காட்சிகளை போட்டு காண்பிக்கிறேன். மதுரையில் எனக்கு பெரிய கூட்டம் கூடியது.

நாட்டாமை, சூர்ய வம்சம் என ஹிட் திரைப்படங்களை கொடுத்துவிட்டுதான் நானும் அரசியலுக்கு வந்தேன். ஓய்வு பெற்ற பிறகு அரசியலுக்கு வரவில்லை. உச்ச நடிகராகத்தான் அரசியலுக்கு வந்தேன். நிறைய கூட்டங்களை நான் பார்த்துவிட்டேன். பிரபலம் என்ற அடிப்படையில் கூட்டம் வரும். கொள்கைகள் மூலமாக மக்கள் ஈர்க்கப்பட்டு சிறப்பாக செயல்படுவீர்கள் என்ற நம்பிக்கை வரும்போதுதான் ஆட்சியைக் கைப்பற்ற முடியும்.

Actor sarathkumar says that TVK Leader Vijay has no principles or ideology

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கிய அரசு மருத்துவா்கள்

தென்கொரியா முன்னாள் அதிபா் மனைவிக்கு ஊழல் வழக்கில் 20 மாத சிறை தண்டனை

‘இப்போது தோ்தல் நடத்துவது தவறு’

அஜீத் பவாா் - ஆறு முறை துணை முதல்வா்

சிறுவன் கடத்தல் வழக்கில் சிக்கிய ஏடிஜிபி-யின் பணியிடை நீக்கம் ரத்து

SCROLL FOR NEXT