மழை கோப்புப்படம்.
தமிழ்நாடு

சென்னை, புறநகரில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

சென்னை, புறநகரில் இரவில் கனமழை பெய்யும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை, புறநகரில் இரவில் கனமழை பெய்யும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வெதர்மேன் என்று அறியப்படும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான், வானிலை நிலவரங்களை அவ்வபோது சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகிறார்.

மழை நிலவரம் குறித்து அவர் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

காலையில் வெய்யில் சுட்டெரித்தாலும், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை பெய்வதற்கான சாத்தியம் அதிகமாக உள்ளது.

தற்போது, சென்னை நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆனால், இரவில் சென்னை, அதன் புறநகரில் பலத்த மழை பெய்யும்.

தமிழகத்தில் கடந்த 2 நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், வேலூர், ராணிப்பேட்டை, கடலூர், விழுப்புரம், மதுரை, சிவகங்கை புதுக்கோட்டை மற்றும் புதுவையில் மழை பெய்துள்ளது.

டெல்டா மாவட்டங்கள் அடுத்த சுற்று மழைக்கு தயாராக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Private meteorologist Pradeep John has said that Chennai and its suburbs will receive heavy rains overnight.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வார ஓடிடி படங்கள்!

நடிகர் ரோபோ சங்கர் காலமானார்!

ஹோட்டல் வருவாய் ரூ.50; ஆனால், ஊழியர்களுக்கு சம்பளம் ரூ.15 லட்சம்! கங்கனா ஆதங்கம்!

முதல்வராக்கிய சசிகலாவை சந்திக்க தைரியம் இருக்கிறதா? - பழனிசாமிக்கு தினகரன் சவால்!

அரசனாக மோகன் லால்! விருஷபா படத்தின் டீசர்!

SCROLL FOR NEXT