நாகூர் மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் நலம்காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமில் பங்கேற்ற அமைச்சர் மா. சுப்பிரமணியன், செய்தியாளர்களுடன் பேசுகையில், ``நாகை மருத்துவமனையில் மகப்பேறு பிரிவு இல்லை. நாகூர் மருத்துவமனையில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைத்தபிறகு 500 படுக்கை வசதியுடன் பிரசவத்துக்கு பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சென்று விஜய்யை பார்க்கச் சொல்லுங்கள்.
நாகை மருத்துவமனையில் பிரசவத்துக்கு மருத்துவர்கள் இல்லை என்று சொல்வது, யாரோ எழுதிக் கொடுத்துப் படிப்பதுபோல் உள்ளது’’ என்று தெரிவித்தார்.
நாகையில் இன்று பிரசாரம் மேற்கொண்ட தவெக தலைவர் விஜய், ``நாகூர் மருத்துவமனையில் பிரசவம் பார்க்க மருத்துவர் இல்லாத நிலையே இருப்பதாக’’ திமுக அரசு மீது குற்றஞ்சாட்டிப் பேசினார்.
இந்த நிலையில், விஜய்யின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: சொன்னார்களே, செய்தார்களா? நாகை பிரச்னைகளை பட்டியலிட்ட விஜய்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.