தவெக தலைவர் விஜய், நாகை மாவட்டத்தைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்திற்குச் சென்றுள்ளார்.
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தவெக தலைவர் விஜய், மக்கள் சந்திப்பு பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். இன்று(சனிக்கிழமை) நாகப்பட்டினம், திருவாரூரில் மக்களைச் சந்தித்து வருகிறார்.
இதற்காக சென்னையில் இருந்து இன்று காலை தனி விமானத்தில் திருச்சி விமான நிலையம் வந்த அவர், அங்கிருந்து கார் மூலம் நாகப்பட்டினம் சென்றார்.
நாகப்பட்டினம் புத்தூர் ரவுண்டானா பகுதியில் உள்ள அண்ணா சிலை அருகே தொண்டர்கள் மத்தியில் பேசினார்.
முதல்வரின் வெளிநாட்டுப் பயணம், நாகை மாவட்டத்தில் உள்ள பிரச்னைகள், மீனவர்கள் விவகாரம் குறித்துப் பேசினார்.
இதன்தொடர்ச்சியாக திருவாரூர் மாவட்டத்திற்கு சென்றுள்ள அவர் கமலாய தெப்பக்குளம் அருகே மக்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.