தவெக பிரசாரம் 
தமிழ்நாடு

பொதுச் சொத்து சேதம்: தவெக நிர்வாகிகள் மீது வழக்கு!

நாகையில் பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்ததாக தவெகவினர் 5 பேர் மீது வழக்குப்பதிவு

இணையதளச் செய்திப் பிரிவு

நாகையில் பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்ததாக தவெகவினர் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாகையில் தவெக தலைவர் விஜய் சனிக்கிழமையில் பிரசாரம் மேற்கொண்ட நிலையில், பிரசாரத்தின்போது பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்ததாக அக்கட்சி நிர்வாகிகள் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாகை மாவட்டத்தில் புத்தூர் அண்ணா சிலை அருகே விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது, வேளாங்கண்ணி பேராலயத்துக்குச் சொந்தமான ஆரோக்கிய மாதா திருமண மண்டபத்தின் சுற்றுச் சுவரில் தவெக தொண்டர்கள் ஏறினர். தொண்டர்கள் ஏறியதில் மண்டபத்தின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பொதுச் சொத்தை சேதப்படுத்தியதாகக் கூறி, 4 பிரிவுகளின்கீழ் தவெக நிர்வாகிகள் 5 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

பிரசாரத்தின்போது, பொதுச் சொத்துக்கோ பொதுமக்களுக்கோ இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்று காவல்துறை முன்னரே அறிவுறுத்தியிருந்தது.

இதையும் படிக்க: விஜய் பரீட்சை எழுதட்டும்; திமுகவுக்கு மாற்று அதிமுகதான்: ஆர்.பி.உதயகுமார்

Police register case against TVK Executives

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்னும் என்ன எண்ணம்... ஜனனி அசோக்குமார்!

அனிருத்துக்கு போட்டியா? சாய் அபயங்கர் பதில்!

பேரொளி வழியில்... டெல்னா டேவிஸ்!

கயல்விழி வலையில்... ஸ்வேதா டோரத்தி!

“விஜய் பரிட்சை எழுதி Pass ஆகட்டும்! அதன் பிறகு பார்க்கலாம்!” ஆர்.பி. உதயகுமார் பேட்டி

SCROLL FOR NEXT