சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1,120 உயர்ந்துள்ளது.
உலக நாடுகளுக்கு இடையிலான போர் பதற்றம், பொருளாதார மந்தநிலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால், தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருகிறது.
இதனால், தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. கடந்த செப்.16-ஆம் தேதி சவரன் ரூ.82 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது. அதைத்தொடர்ந்து சற்று ஏற்ற, இறக்கமாக இருந்து வந்தது.
கடந்த செப்.18-இல் சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.81,760-க்கும், செப்.19-இல் சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.81,840-க்கும் விற்பனையானது. தொடர்ந்து, சனிக்கிழமை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ரூ.10,290-க்கும், சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.82,320-க்கும் விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது.
இந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று(செப்,22) காலை, ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியது,
அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.10,360க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.82,880க்கும் விற்பனையானது.
தற்போது, தங்கத்தின் விலை ஒரே நாளில் இரண்டாவது முறையாக உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து ரூ. 10,430-க்கும் சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து ரூ. 83,440-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை, இன்று காலை சவரனுக்கு ரூ. 560 உயர்ந்த நிலையில், பிற்பகலில் மீண்டும் ரூ. 560 உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க: சென்னை ஒன் செயலியை அறிமுகம் செய்தார் முதல்வர் ஸ்டாலின்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.