தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் இந்த வார சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வருகின்ற 27 ஆம் தேதி சேலம் மற்றும் நாமக்கல்லில் விஜய் பிரசாரம் செய்வார் என்று திட்டமிடப்பட்டிருந்த நிலையில், சேலத்துக்கு பதிலாக கரூர் மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தவெக தலைவர் விஜய் சனிக்கிழமைகள் தோறும் மக்களை சந்திக்கும் சுற்றுப் பயணத்தை கடந்த செப். 13 முதல் மேற்கொண்டு வருகிறார்.
செப். 13 ஆம் தேதி திருச்சி, அரியலூரிலும், 20 ஆம் தேதி நாகை, திருவாரூரிலும் விஜய் மக்களை சந்தித்து பிரசாரம் மேற்கொண்டார்.
வருகின்ற 27 ஆம் தேதி சேலம் மற்றும் நாமக்கல்லில் பிரசாரம் மேற்கொள்வார் என்று ஏற்கெனவே திட்டமிடப்பட்டு அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், திடீர் மாற்றமாக சேலத்துக்கு பதிலாக வருகின்ற சனிக்கிழமை கரூர் மற்றும் நாமக்கல்லில் பிரசாரம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜய்யின் கரூர் பிரசாரத்துக்கான காவல்துறையிடம் அனுமதி பெறுவது உள்ளிட்ட பணிகளை தவெக நிர்வாகிகள் தொடங்கியுள்ளனர்.
தொடர்ந்து, அக்டோபர் 4 ஆம் தேதி வேலூர் மற்றும் ராணிப்பேட்டையில் விஜய் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.