கரூர்: கரூரில் விஜய் பிரசாரத்தில் 31 பேர் மயக்கமடைந்து பலியானதாகக் களத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
அவர்களுள் 6 குழந்தைகளும், 16 பெண்களும் அடங்குவர் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 20-க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில் கரூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அங்கு சென்றவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
இந்தத் தகவலைத் தொடர்ந்து, கரூர் மாவட்ட ஆட்சியர் விரைந்துள்ளார். அங்கு மயக்கமடைந்த நபர்களுக்கு தேவையான சிகிச்சையளிக்க அவர்கள் அறிவுறுத்தி ஆய்வு செய்து வருகின்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.