தவெக தலைவர் விஜய், மக்கள் சந்திப்பு பிரசாரக் கூட்டம் டிசம்பர் மாதம் வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பிப்ரவரி மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டு புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நிலையில், தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பிரசாரக் கூட்டங்களை நடத்தி வருகிறார். மூன்றாவது வாரமாக, நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டத்தில் பிரசார சுற்றுப்பயணத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தனி விமான மூலம் இன்று திருச்சி வந்துள்ள விஜய் அங்கிருந்து சாலை வழியாக நாமக்கல் செல்கிறார். அங்கிருந்து கரூர் சென்று பிரசாரம் நடத்தவிருக்கிறார்.
இன்னும் சில மாதங்களில் தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகம் முழுதும் இருக்கக் கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணியை துவங்கியுள்ளன.
தவெக தலைவர் விஜய், ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்’ என்ற தலைப்பில், தேர்தல் பிரசாரச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், இன்று செப் 27ஆம் தேதி நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்
அதாவது செப். 13 ஆம் தேதி திருச்சியில் விஜய் தனது பிரசாரத்தை தொடங்கினார். திருச்சி மாவட்டம் திருப்புமுனை என்று பல்வேறு அரசியல் கட்சிகள் கூறி வந்த நிலையில் விஜய் திருச்சியில் பிரசாரம் ஆரம்பித்தது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்பட்டது.
அவர் அடுத்தபடியாக இரண்டாம் கட்டமாக நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டார். தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மூன்றாவது வாரமாக இன்று நாமக்கல், கரூர் செல்கிறார்.
திருச்சியில் இருந்து பிரசார பேருந்தில் நாமக்கல் சென்று அங்கு பிரசாரம் செய்த பின்பு இன்று பிற்பகலில் கரூரில் தனது பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.
கடந்த 13 ஆம் தேதி திருச்சியில் தனது பிரசாரத்தைத் தொடங்கிய விஜய் 20 ஆம் தேதி நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் தனது சுற்றுப்பயணத்தை முடித்தார். குறிப்பாக மூன்று வாரங்களும் தனி விமானம் மூலம் சென்னையிலிருந்து திருச்சி வந்த பிறகு தனது பிரசாரத்தைத் தொடர்ந்து நடத்திக் கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், ஏற்கனவே டிசம்பர் மாதம் வரை அறிவிக்கப்பட்டிருந்த பிரசாரப் பணத்தை பிப்ரவரி மாதம் இறுதி வரை நீட்டித்து புதிய அட்டவணையை தவெக வெளியிட்டுள்ளது.
இதையும் படிக்க.. நாமக்கல், கரூரில் பிரசாரம்: திருச்சி வந்தார் தவெக தலைவர் விஜய்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.