கரூர்: கரூரில் விஜய் பிரசாரத்தில் 36 பேர் மயக்கமடைந்து பலியானதாகக் களத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரசாரத்தில் கலந்துகொண்ட திரளான மக்கள் கூட்டத்தில் ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் 36 பேர் மயக்கமடைந்து பலியானதாகக் களத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
அவர்களுள் குழந்தைகளும் அடங்குவர் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில் கரூர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அங்கு சென்றவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
கரூரில் தவெக பிரசாரம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ள வேலுசாமிபுரத்துக்கு வழக்கம்போல இன்றும்(செப். 27) காலதாமதமாக, சரியாகச் சொல்ல வேண்டுமானால் மாலை 7 மணியளவில் வருகை தந்த விஜய் பிரசாரம் செய்தார்.
விஜய் மைக் பிடித்து பேசியதோ, பத்து நிமிடங்களை நெருங்கியதா என்றால் அது கேள்விக்குறியே? ஆனால், அந்தக் குறுகிய காலத்துக்குள், (அதாவது விஜய்யின் வாகனம் வந்து நின்றது முதல் அவர் வாகனத்தின் மேலே ஏறி, அதன்பின் பேசி முடித்துக் கொண்டு திரும்பியது வரை...) அதற்குள் அந்த இடமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் உருமாறிவிட்டது. அதற்கு முக்கிய காரணம், விஜய்யின் வாகனம் நிறுத்தப்பட்டிருந்த இடத்திலிருந்து சுமார் 20 அடி தூரத்தில் அவரை காண திரண்டிருந்த மக்கள் கூட்டத்தில் நின்றிருந்த சிலர் மயக்கமடைந்து விழுந்ததால் அந்த இடத்தில் பரபரப்பு உண்டானது. இதை மேலே நின்றபடி பேசிக் கொண்டிருந்த விஜய் கவனித்து விட்டார்.
உடனடியாக பேசுவதை நிறுத்திக்கொண்டு, அவர் தமது உதவியாளர்களிடமிருந்து தண்ணீர் பாட்டில்களை வாகனத்தினுள் இருந்து எடுத்துவர பணித்தார். அதன்பின், அந்த பாட்டில்களை கூட்டத்தை நோக்கி வீசி, பாதிக்கப்பட்ட நபர்களுக்கு முதலுதவி செய்ய உதவினார். மேலும், ஆம்புலன்ஸ் ஒன்றையும் உடனடியாக சம்பவ இடத்துக்கு வரவழைக்குமாறு உதவியாளர்களிடம் அறிவுறுத்தினார். இதனால் சில நிமிடங்கள் அங்கு அமைதி நிலவியது.
இந்த நிலையில், பிரசாரத்தில் ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் 30-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்து பலியானதாகக் களத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில் கரூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அங்கு சென்றவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
இந்தத் தகவலைத் தொடர்ந்து, கரூர் மாவட்ட ஆட்சியர்அரசு மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். அங்கு மயக்கமடைந்த நபர்களுக்கு தேவையான சிகிச்சையளிக்க அவர்கள் அறிவுறுத்தினார். மேலதிகத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
இந்த நிலையில், இந்த துயர சம்பவத்துக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். தேவையான சிகிச்சையளிக்க அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.