இபிஎஸ் (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

கரூர் பலி: இபிஎஸ் பிரசாரம் ஒத்திவைப்பு!

எடப்பாடி பழனிசாமி இன்று மேற்கொள்ளவிருந்த பிரசாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

கரூரில் தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 39 பேர் பலியான சம்பவத்தையடுத்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று(செப். 28) மேற்கொள்ளவிருந்த பிரசாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 39 பேர் பலியாகினர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று(செப். 28) தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பாப்பிரெட்டிபட்டி, அரூர் தொகுதிகளில் மேற்கொள்ளவிருந்த பிரசாரம் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் நாளை பாலக்கோடு, பென்னாகரம் தொகுதிகளில் நடைபெறவிருந்த பிரசாரம் நாளை மறுநாளுக்கு மாற்றப்பட்டுள்ளது.

மேலும், இன்று நடைபெறவிருந்த திமுகவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Following the stampede at a Tvk campaign in Karur in which 39 people died, it has been announced that the campaigning that AIADMK General Secretary Edappadi Palaniswami was scheduled to undertake has been postponed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேவரா 2 தொடக்கம்: அறிவிப்பை வெளியிட்டது படக்குழு!

கரூர் பலி 40ஆக உயர்வு

கரூர் பலி: உச்சநீதிமன்ற விசாரணை வேண்டும்! - நயினார் நாகேந்திரன்

கட்டுக்கடங்காத கூட்டம் வரும்போது நேரத்திற்கு வரவேண்டும்! - Udhayanidhi Stalin

Vijay கைது செய்யப்படுவாரா? Stalin பதில்

SCROLL FOR NEXT