கரூர் வேலுசாமிபுரத்தில் நெரிசல் நடைபெற்ற இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய அமைச்சர் எல் முருகன் உள்ளிட்டோர். 
தமிழ்நாடு

கரூரில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கரூர் வருகை குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் பார்வையிடவதற்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கரூர் வருகை தந்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மூன்றாவது கட்டமாக நாமக்கல், கரூரில் பிரசார பயணம் மேற்கொண்டார். நாமக்கல் நிகழ்வை முடித்துக் கொண்டு, 7 மணி நேரம் தாமதமாக கரூருக்கு சனிக்கிழமை இரவு வந்தபோது, அவரைக்காண பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர்.

அவர் இரவு 7 மணியளவில் பேசத் தொடங்கியபோது, ஒருவருக்கு ஒருவர் முண்டியடித்தபடி கூட்டம் அலைமோதியது.

இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனா். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கரூர் மருத்துவமனைக்கு நேரில் சென்று பலியானவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

இந்த நிலையில் சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமிபுரத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய இணையமைச்சர் எல். முருகன் ஆகியோர் திங்கள்கிழமை காலை 11 10 மணியளவில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது அங்கு பிரசாரத்தில் கூட்டத்தில் பங்கேற்றவர்களின் காலணிகள் கிடந்ததையும் பார்வையிட்டனர். பின்னர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று அங்கு நெரிசலில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நிர்மலா சீதாராமன் நலம் விசாரித்தார்.

பின்னர், நெரிசலில் சிக்கி ஒரே கிராமத்தைச் சேர்ந்த அதாவது ஏமூர் புதூர் கிராமத்தைச் சேர்ந்த 5 பேர் பலியானதையடுத்து, அவர்களது வீடுகளுக்கும் நேரில் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

Union Minister Nirmala Sitharaman will visit Karur to inspect the site of the stampede in Karur.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூர் பலி: விஜய் இன்று முக்கிய ஆலோசனை! அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

காந்தா... காஜல் அகர்வால்!

கரூர் பலி: அவதூறு, வதந்தி பரப்ப வேண்டாம் -முதல்வர் ஸ்டாலின்

பிகாரில் 3 அம்ரித் பாரத், 4 பயணிகள் ரயில் சேவை தொடக்கம்: அஸ்வினி வைஷ்ணவ்

உயிர்சேதம் ஏற்படும் என ஆனந்தை எச்சரித்தோம்! எப்ஐஆரில் அதிர்ச்சித் தகவல்கள்!

SCROLL FOR NEXT