முதல்வர் மு.க. ஸ்டாலின் / அனல் மின் நிலையத்தில் விபத்துக்குள்ளான பகுதி 
தமிழ்நாடு

எண்ணூர் விபத்து: ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

எண்ணூர் அனல் மின் நிலைய விபத்தில் உயிரிழந்த வடமாநிலத்தைச் சேர்ந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம்.

இணையதளச் செய்திப் பிரிவு

எண்ணூர் அனல் மின் நிலைய விபத்தில் உயிரிழந்த வடமாநிலத்தைச் சேர்ந்தோரின் குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சம் நிவாரணமாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

''எண்ணூரில் பெல் நிறுவனம் மேற்கொண்டு வரும் மின் உற்பத்தி நிலையக் கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்தில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒன்பது பணியாளர்கள் இறந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மின்துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் மின்வாரிய தலைவா் ஜெ. ராதாகிருஷ்ணன் ஆகியோரை உடனே நேரடியாகச் சென்று நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளேன்.

உயிரிழந்த பணியாளர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்கிடவும், அவர்களது உடலை அவர்களது சொந்த மாநிலத்திற்கு எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஆணையிட்டுள்ளேன்'' எனப் பதிவிட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக நிலை 4-ல் கொதிகலன் பிரிவில் நடைபெறும் கட்டுமானப் பணியில் சாரம் சரிந்து இன்று (செப். 30) விபத்து நேர்ந்தது.

இதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம் அடைந்தவர்கள் கவலைக்கிடமான சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு மேலும் 5 பேர் உயிரிழந்தனர். இதனால் இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9ஆக அதிகரித்தது.

இதையும் படிக்க | தவெகவின் புகாரை மறுக்கும் அரசு: கரூரில் நடந்தது என்ன? - அதிகாரிகள் விளக்கம்

Ennore accident: Rs. 10 lakh relief announced by mk stalin

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குண்டடம் பகுதியில் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க அமைச்சா் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

உ.பி.: பரேலியில் போராட்டத்தைத் தூண்டிய மத குருவின் 8 சொத்துகளை இடிக்க நடவடிக்கை

சத்தியமங்கலம் நகராட்சியில் இரவு நேரத்திலும் தூய்மைப் பணி

பல்லவராயன்பாளையத்தில் விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

விலை வீழ்ச்சி: தக்காளிகளை சாலையில் கொட்டிய விவசாயிகள்

SCROLL FOR NEXT