கரூர் கூட்டநெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற தவெக தலைவர் விஜய் தலைமையிலான பிரசாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியான சம்பவம் நாட்டை உலுக்கியுள்ளது.
இந்த நிலையில், இன்று காலை கோவை விமான நிலையம் வந்த கே.சி.வேணுகோபால், சாலை வழியாக கரூருக்குச் சென்று நெரிசல் ஏற்பட்ட இடத்தை ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களையும் பலியானோரின் குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது, காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, எம்பிக்கள் ஜோதிமணி, விஜய் வசந்த் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முன்னதாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தவெக தலைவர் விஜய்யை தொலைபேசியில் தொடர்புகொண்டு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி சம்பவம் குறித்து விசாரித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.