தென்மேற்கு பருவ மழை இன்றுடன் முடிவடைகிறது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் பதிவிட்டுள்ளார்.
மழை தொடர்பான கணிப்புகளை சமூக வலைதளங்களில் வெளியிடும் தமிழ்நாடு வெதர்மேன் என்று அறியப்படும் பிரதீப் ஜான் தென்மேற்கு பருவமழை இன்றுடன்(செப். 30) முடிவடைகிறது என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதீப் ஜான் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “புள்ளிவிவரப்படி தென்மேற்கு பருவமழை இன்றுடன் முடிவடைகிறது. இனிமேல் பெய்யும் மழையானது வடகிழக்கு பருவமழையில்தான் சேரும். 2023, 2024-க்குப் பிறகு சென்னைக்கு அற்பதமான ஆண்டு.
மீனம்பாக்கம் பகுதியைப் பொறுத்தவரை, பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 362 மி.மீ. மழை பெய்துள்ளது.
தென்சென்னை முழுவதும் மழை பெய்யவில்லை என்று கூற முடியாது. மீனம்பாக்கம்-நங்கநல்லூர்-ஆதம்பாக்கத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழை அளவு குறைவாக இருந்தது.
சோழிங்கநல்லூர் போன்ற தென்சென்னையின் பிற பகுதிகளில் மழைப் பொழிவு நன்றாக இருந்தது.
அண்ணாநகர், அம்பத்தூர், பெரம்பூர், கொரட்டூர், மணலி போன்ற அனைத்து இடங்களில் தென்மேற்கு பருவமழை சமயத்தில் 800/900 மி.மீ. மழைப் பதிவை கடந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: கரூர் செல்லாதது ஏன்? விடியோ வெளியிட்டார் தவெக தலைவர் விஜய்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.