தப்பா முடிவு பண்ணிங்கனா பனையூர் வாசலில் நிற்க வேண்டியிருக்கும்: பெரம்பூரில் அன்புமணி பிரசாரம்
தப்பா முடிவு பண்ணிங்கனா பனையூர் வாசலில் நிற்க வேண்டியிருக்கும் என்று பெரம்பூரில் பிரசாரம் மேற்கொண்ட பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
தப்பா முடிவு பண்ணிங்கனா பனையூர் வாசலில் நிற்க வேண்டியிருக்கும் என்று பெரம்பூரில் பிரசாரம் மேற்கொண்ட பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
பெரம்பூர் தொகுதி பாமக வேட்பாளர் திலகபாமாவை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் அன்புமணி வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், பெரம்பூர் தொகுதி வேட்பாளர் கவிஞர் திலகபாமா ஒரு போராளி. போராளி என்றால் களத்தில் இறங்கி மக்களுக்காக போராடுபவர்.
தூய்மைப் பணியாளர்கள் இந்த பகுதியில் சாலையில் இறங்கி போராடியபோது அவர்களுடன் போராட்டத்தில் பங்கேற்றவர் திலகபாமா. இந்த தொகுதி மக்கள் சிந்திக்க வேண்டும். நீங்கள் பார்க்கமுடியாத, பேச முடியாத, அணுக முடியாத ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் உங்களுக்கு வேண்டுமா?.
Advertisement
சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் பனையூர் கேட் வாசலில் நிற்க வேண்டும். தப்பா முடிவு செய்தீங்கனா, பனையூர் கேட் வாசல் வெளியே நிற்கனும். திலகபாமாவை நீங்கள் தேர்ந்தெடுத்தீங்கள் என்றால் உங்கள் வீட்டு வாசலில் நிற்பார். அதுதான் வித்தியாசம். இந்த தொகுதி விஜபி தொகுதி கிடையாது.
சாமானிய தொகுதி. இந்த தொகுதியில் வாழுகின்றவர்கள் அடிப்படை மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், வஞ்சிக்கப்பட்ட மக்கள். இந்த தொகுதியில் வாழுகின்றவர்கள் தொழிலாளர்கள். இவ்வாறு குறிப்பிட்டார்.
பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தவெக தலைவர் விஜய்க்கு எதிராக பாமகவின் பொருளாளர் திலகபாமா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.