ஆண்டிப்பட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!
முதல்வர் மு.க. ஸ்டாலினின் 6-ம் கட்ட தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் பற்றி...
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின், தனது 6-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை ஆண்டிப்பட்டியில் தொடங்குகிறார்.
தமிழகம் முழுவதும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தலைவர் மு.க. ஸ்டாலின், தேர்தல் பிரசாரம் மூலமாக வாக்கு சேகரித்து வருகிறார்.
இந்நிலையில் முதல்வரின் 6-ம் கட்ட தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் குறித்த விவரத்தை திமுக தலைமை வெளியிட்டுள்ளது.
Advertisement
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில், பேரவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது பிரசாரத்தை, மார்ச் 31-ஆம் தேதி திருவாரூரில் தொடங்கிய நிலையில், ஆறாம் கட்ட பிரசாரத்தை ஏப்ரல் 17-ஆம் தேதி ஆண்டிப்பட்டியில் தொடங்குகிறார்.
அதன்படி, ஏப். 17 மாலை 5 மணிக்கு ஆண்டிப்பட்டி, இரவு 7 மணிக்கு திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியிலும்
ஏப். 18 ஆம் தேதி மாலை 5 மணிக்கு திருப்பூரிலும் இரவு 7 மணிக்கு மேட்டுப்பாளையத்திலும்
ஏப். 19 ஆம் தேதி மாலை 4 மணிக்கு ஓசூரிலும் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.