செய்தியாளர் சந்திப்பில் நயினார் நாகேந்திரன் 
தமிழ்நாடு

விஜய் டான்ஸ் மட்டுமே ஆடிக்கொண்டிருக்க வேண்டியதுதான்! - நயினார் நாகேந்திரன் பதில்

விஜய் பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் பதில்...

இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் எதுவுமே தெரியாமல் டான்ஸ் ஆடிக்கொண்டிருக்கிறார் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

தவெகவின் 3 ஆம் தொடக்கவிழாவில் பேசிய கட்சியின் தலைவர் விஜய், 'பாஜக தலைமையில் மற்றும் பலர்' என்று கூட்டணி குறித்துப் பேசினார்.

இதுபற்றிய கேள்விக்கு பதிலளித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், "தம்பி விஜய்க்கு ஒன்றுமே தெரியாது என்று நினைக்கிறேன். 3 ஆம் ஆண்டு தொடக்க விழாவில் டான்ஸ் ஆடிக்கொண்டிருக்கிறார். ஒரு நாட்டின், கட்சியின் தலைவராக இருந்துகொண்டு தமிழ்நாட்டில், தமிழ்நாட்டின் கலாசாரம் என்னவென்று தெரியாமல் ஆடிக்கொண்டிருக்கிறார்.

அவர் டான்ஸ் ஆடினால், டான்ஸ் மட்டுமே ஆடிக்கொண்டிருக்க வேண்டியதுதான். என்டிஏ என்றால் பாஜக இருக்கிறது, அதிமுக இருக்கிறது, தமிழ் மாநில காங்கிரஸ், மேலும் பல கட்சிகளும் அமைப்புகளும் இருக்கின்றன. இதுகூட தெரியாமல் பேசிக்கொண்டிருந்தால் எப்படி?" என்று தெரிவித்தார்.

அதிமுகவின் திண்டுக்கல் சீனிவாசன் கூறுகையில், "விஜய் நேர்மறையான முறையில் உழைத்து வந்திருக்கிறாரா? செங்கோட்டையன், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததற்காக சிறைக்குச் சென்று பின்னர் ஜெயலலிதாவின் உதவியால் வெளியே வந்தவர். நேர்மையானவர், ஊழல் அற்றவர் என்பதை விஜய் நிரூபித்துவிட்டு அதன் பிறகு எங்களை விமர்சிக்கட்டும்.

எடப்பாடி பழனிசாமிதான் கூட்டணிக்கு தலைவர், தலைமை கட்சி அதிமுக என்றும் இபிஎஸ்தான் முதல்வர் வேட்பாளர் என்றும் அமித் ஷா தெளிவாக கூறிவிட்டார்" என்றார்.

BJP Nainar Nagendran replied to TVK Leader vijay

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பை 2026: 20 அணிகளின் வீரர்கள் விவரம்!

சிறுசேரி சிப்காட் சுற்றுச்சூழல் பூங்கா: முதல்வர் திறப்பு!

என் தனிமை நீங்கியது : முதல் கார் வாங்கிய சின்ன திரை நடிகை!

கென் கருணாஸின் யூத் வெளியீடு அப்டேட்!

நாம் தமிழரைத் தவிர்த்த விஜய்? | Vijay | TVK | NTK

SCROLL FOR NEXT