முகப்பு
தமிழ்நாடு

பாஜக பதவியிலிருந்து கேசவவிநாயகம் விடுவிப்பு: ஆர்எஸ்எஸ்ஸில் புதிய பொறுப்பு!

கேசவ விநாயகத்துக்கு ஆர்எஸ்எஸ்ஸில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது தொடர்பாக...

Updated On : 10 பிப்ரவரி, 2026 at 7:42 AM
கேசவவிநாயகம் - கோப்புப் படம்
பகிர்:

தமிழக பாஜக பதவியிலிருந்து நீக்கப்பட்ட கேசவவிநாயகத்துக்கு ஆர்எஸ்எஸ்ஸில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் ‘சத்பாவ்’ (சமுதாய நல்லெண்ணம்) என்ற பொறுப்பில் கேசவவிநாயகம் செயல்படுவார் என்றும் வட தமிழ்நாட்டின் ஆர்.எஸ்.எஸ்-ன் மாநில செயற்குழு உறுப்பினராகவும் செயல்படுவார் என்றும் ஆர்எஸ்எஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழக பாஜக அமைப்பு பொதுச் செயலாளராக இருந்த கேசவவிநாயகம் அந்தப் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

அண்ணாமலை தரப்பில் இருந்து புகார் கூறப்பட்டு வந்த நிலையில் பாஜக பொறுப்பில் இருந்து கேசவ விநாயகம் மாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் தமிழக பாஜக அமைப்பு பொதுச் செயலாளராக கேசவ விநாயகம் பொறுப்பு வகித்து வந்தார். 10 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பொறுப்பில் இருந்துவந்த நிலையில், தற்போது மாற்றப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக, தமிழ்நாடு ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் தென்பாரத செய்தி தொடர்பாளர் ஸ்ரீராம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முழு நேர ஊழியர்கள் நிர்வாக காரணங்களுக்காக பல்வேறு பொறுப்புகளுக்கு மாற்றப்படுவது பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைமுறையில் இருந்து வருகிறது.

இதன் அடிப்படையில் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில அமைப்பு செயலாளராக பொறுப்பு எடுத்து வேலை செய்த கேசவவிநாயகம் இனிமேல் தமிழ்நாடு முழுவதும் சத்பாவ் (சமுதாய நல்லெண்ணம்) என்ற பொறுப்பில் செயல்படுவார்.

அத்துடன் வட தமிழ்நாட்டின் ஆர்.எஸ்.எஸ்.ன் மாநில செயற்குழு உறுப்பினராக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

Keshavavinayakam, who was removed from his post in the Tamil Nadu BJP, has been given a new responsibility in the RSS.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.