முதல்வருக்கு இனிப்பு ஊட்டிய அரசு ஊழியர்கள்...  DIPR
தமிழ்நாடு

அனைத்துத் தரப்பினரின் கோரிக்கைகளும் கேட்காமலே நிறைவேறும்! - முதல்வர்

அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவு...

இணையதளச் செய்திப் பிரிவு

அரசு ஊழியர்களின் 20 ஆண்டு கால கோரிக்கையை திமுக அரசு நிறைவேற்றியுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

பழைய ஓய்வூதியத் திட்டம், காலிப் பணியிடங்களை நிரப்புதல், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ, ஃபோட்டா-ஜியோ உள்ளிட்ட அமைப்புகள் போராட்டம் நடத்திவந்த நிலையில் முதல்வர் இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பழைய ஓய்வூதியத் திட்டத்திற்குப் பதிலாக புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 'தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்ட'த்தை செயல்படுத்த முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,

"தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்: 20 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றிய திமுக அரசு!

நம்பி வாக்களித்த மக்களுக்கு, கழக அரசு எப்போதுமே உண்மையாக இருக்கும் என மீண்டுமொருமுறை செய்து காட்டியுள்ளோம்!

அரசு ஊழியர்களுக்கு மிகப் பெரும் புத்தாண்டு, பொங்கல் பரிசாக அறிவிப்பினை வெளியிட்டுள்ளோம். திராவிட மாடல் நல்லாட்சிதான் தொடரும்!

தலைநிமிர்ந்து வரும் தமிழ்நாட்டின் நிதிநிலை சீரடையச் சீரடைய அனைத்துத் தரப்பினரின் கோரிக்கைகளும் நீங்கள் கேட்காமலே நிறைவேறும்!" என்று பதிவிட்டுள்ளார்.

DMK government has fulfilled govt employees 20 year demand: MK stalin

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தகவல்தொழில்நுட்பத்தில் தடம் பதிக்க வழிகாட்டுகிறது ஐஐஐடி!

துலா ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

மருத்துவா் ஒனிா்பன் தத்தா காலமானார்!

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சூழலைக் கண்டித்து பல்ஸ்வா டெய்ரியில் காங்கிரஸ் போராட்டம்

அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT