தமிழ்நாடு

தமிழ்நாடு போராடும் என அன்றே காட்டியவர்கள் வேலுநாச்சியார், கட்டபொம்மன் : மு.க. ஸ்டாலின்

தமிழ்நாடு போராடும் என அன்றே காட்டியவர்கள் வேலுநாச்சியார், கட்டபொம்மன் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை: தமிழ்நாடு போராடும் என அன்றே காட்டிய வீரச்சுடர்கள்தாம் வீரமங்கை வேலுநாச்சியாரும் வீரபாண்டிய கட்டபொம்மனும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

வீரமங்கை வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோரது பிறந்தநாளை தமிழகம் இன்று கொண்டாடி வருகிறது. இதனை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் பதிவில்,

மிரட்டினால் அடங்கிவிடுவோம் என எண்ணியோர்க்கு, 'தமிழ்நாடு போராடும்' என அன்றே காட்டிய வீரச்சுடர்கள்தாம் வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களும், வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களும்!

இந்திய நாட்டின் விடுதலைக்காக முன்னோடிகளாகப் போராடிய அவர்தம் பெருமையைத் தொடர்ந்து போற்றி வருகிறது நமது திராவிட மாடல் அரசு.

அண்மையில் மதுரையில் திறக்கப்பட்ட மேம்பாலத்துக்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டினோம், கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்குத் திருவுருவச்சிலை அமைத்தோம்.

தமிழ்நிலத்தின் ஆளுமைகளைத் தரணியெங்கும் கொண்டு சேர்த்திடும் நம் பணி தொடரும் என்று பதிவிட்டுள்ளார்.

Chief Minister M.K. Stalin has said that Velunachiyar and Kattabomman were the ones who showed that Tamil Nadu would fight.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பல்பொருள் அங்காடியில் திருடியவா் கைது

காட்டுப்பன்றிகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த கோரிக்கை

பொங்கல் பண்டிகை: கோவைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

உதகை அருகே தேயிலைத் தோட்டத்தில் காலில் காயத்துடன் உலவும் புலி

ஏழுமலையானுக்கு ரூ. 3 கோடி நன்கொடை

SCROLL FOR NEXT