மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜிக்கு பிரதமர் மோடி தனது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
மேற்குவங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மமதா பானர்ஜி இன்று(ஜன. 5) தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
இதையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில்,
"மேற்குவங்க முதல்வர், சகோதரி மமதா பானர்ஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நல்ல உடல்நலத்துடன் நீண்ட நாள் வாழ கடவுளிடம் வேண்டுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,
"சகோதரி மமதா பானர்ஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். முதலமைச்சராக உங்கள் ஆட்சி நிர்வாகத்தின் கொள்கையாக மதச்சார்பின்மையை நிலைநிறுத்தி இந்த நாடு அனைவருக்கும் சொந்தமானது என்பதை உறுதி செய்துள்ளீர்கள்.
ஆட்சி செய்வதற்கான அனைவரையும் உள்ளடக்கிய இந்த அணுகுமுறை, அரசியலமைப்பு விழுமியங்களையும் சமூக நல்லிணக்கத்தையும் தொடர்ந்து வலுப்படுத்தட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.