முகப்பு
தமிழ்நாடு

வெள்ளி கிலோவுக்கு ரூ. 5000 உயர்வு! தங்கம் விலையும் அதிகரிப்பு!

தங்கம், வெள்ளி இன்றைய நிலவரம் தொடர்பாக...

Updated On : 6 ஜனவரி, 2026 at 10:01 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜன. 6) சவரனுக்கு ரூ. 560 உயர்ந்துள்ளது.

தங்கம் விலை நிகழாண்டு தொடக்கம் முதலே சென்னையில் ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. கடந்த ஜன. 1-இல் சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.99,520-க்கு விற்பனையான நிலையில், மறுநாளே (ஜன. 2) காலை, மாலை என ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ரூ.1 லட்சத்து 640-க்கு விற்பனையானது.

தொடர்ந்து, சனிக்கிழமை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.1 லட்சத்து 800-க்கும் விற்பனையானது.

வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை காலை தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.12,680-க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ. 1 லட்சத்து 1,440-க்கும் விற்பனையானது. தொடர்ந்து, மாலை வர்த்தகம் நிறைவடையும்போது, தங்கம் விலை மீண்டும் கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.12,760-க்கும் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.1 லட்சத்து 2,080-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(செவ்வாய்க்கிழமை) சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 2,640-க்கும் கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 12,830-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.271-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.5,000 உயர்ந்து ரூ.2.71 லட்சத்துக்கும் விற்பனையானது.

summary

In Chennai, the price of gold jewelry increased by Rs. 560 per sovereign today (Jan. 5).

முழு கட்டுரையைப் படிக்க →