சிதம்பரம் ஓமக்குளம் நந்தனார் மடத்தில் உள்ள சிவலோகநாதர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை அமைக்க புதன்கிழமை பந்தகால் நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த நந்தனார் கல்விக்கழகத் தலைவர் கே.ஐ.மணிரத்தினம்  
தமிழ்நாடு

நந்தனார் மடத்தில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தகால் நடும் நிகழ்ச்சி

ஓமக்குளம் பகுதியில் உள்ள நந்தனார் மடத்தில் சிவலோகநாதர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தகால் நடும் நிகழ்ச்சி...

இணையதளச் செய்திப் பிரிவு

சிதம்பரம்: சிதம்பரம் ஓமக்குளம் பகுதியில் உள்ள நந்தனார் மடத்தில் சிவலோகநாதர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தகால் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை (ஜன. 7) காலை நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள நந்தனார் மடத்தில் உள்ள செளந்தரநாயகி சமேத சிவலோகநாதர் கோயில் 32 ஆண்டுகளுக்கு பிறகு ஜன. 28 ஆம் தேதி புதன்கிழமை காலை 9.30 மணிக்கு மேல் 10 மணிக்குள் மகாகும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

மேலும், நந்தனாரின் தியான மண்டபம் புதுப்பிக்கப்பட்டு அதில் நந்தனாரின் வரலாறும், சுவாமி சகஜானந்தா வரலாறும் வைக்கப்படவுள்ளது. இந்நிலையில், கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை அமைக்க பந்தகால் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை காலை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் நந்தனார் கல்விக்கழகத் தலைவர் கே.ஐ. மணிரத்தினம், உஷா மணிரத்தினம் ஆகியோர் பந்தகால் நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் கமல் மணிரத்தினம், அரவிந்த் மணிரத்தனம், கல்விக்கழக செயலாளர் வி.திருவாசகம், பொருளாளர் டி.ஜெயச்சந்திரன், மட நிர்வாகக்குழு செயலாளர் டி.கே.எம்.வினோபா, நிர்வாகிகள் ஏ.சங்கரன், பி.பன்னீர்செல்வம் மற்றும் கஜேந்திரன், மணலூர் ரவி, தமிழரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Nandhanar Mutt in preparation for the consecration ceremony

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜன நாயகனுக்கு மீண்டும் சிக்கல்: தணிக்கை வாரியம் மேல்முறையீடு!

அமித் ஷா அலுவலகத்துக்கு வெளியே திரிணமூல் எம்பிக்கள் போராட்டம்! குண்டுக்கட்டாக கைது செய்த போலீஸ்!

ஜன நாயகனுக்கு யு/ஏ தணிக்கைச் சான்று வழங்க உத்தரவு!

ரூ. 18 லட்சம் பணப்பெட்டியுடன் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய போட்டியாளர்!

இபிஎஸ் - நயினார் ஆலோசனை! 56 தொகுதிகள் கேட்கும் பாஜக?

SCROLL FOR NEXT