முதல்வர் ஸ்டாலின் ! அண்ணாமலை  கோப்புப் படம்
தமிழ்நாடு

போலியான வாக்குறுதிகளால் மக்களை ஏமாற்றும் திமுக: அண்ணாமலை

போலியான வாக்குறுதிகளால் தமிழக மக்களை திமுக ஏமாற்றுவதாக அண்ணாமலை குற்றச்சாட்டு

இணையதளச் செய்திப் பிரிவு

போலியான வாக்குறுதிகளால் தமிழக மக்களை திமுக ஏமாற்றுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.

முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் “தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகள் முடிவடையும் நிலையில், தனது அரசு எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறது என்பதே முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியவில்லை.

கடந்த 2023 செப்டம்பரில், 99% வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக கூறினார். கடந்த வாரம், அது 72% ஆனது. இன்று, 80% வாக்குறுதிகள் நிறைவேற்றியுள்ளோம் எனக் கூறுகிறார். இது முழுக்க முழுக்க, மக்களை ஏமாற்றும் நாடகம்.

போலியான வாக்குறுதிகளால் மீண்டும் தமிழக மக்களை ஏமாற்றலாம் என்ற திமுகவின் கனவு, ஒருபோதும் பலிக்காது” என்று பதிவிட்டுள்ளார்.

BJP Leader Annamalai alleged that the DMK Govt is deceiving the people of Tamil Nadu with false promises

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

200 தொகுதிகளுக்கு மேல் திமுக கூட்டணி வெற்றி பெறும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

தில்லி - என்சிஆரில் உள்ள குண்டா்களுக்கு துப்பாக்கிகளை விநியோகித்ததாக பெண் கைது

காலபைரவா் கோயிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மயக்கம், தலைச்சுற்றல் பிரச்னை தீர?

ஜன. 27-இல் ஆா்ப்பாட்டம்: ஓய்வூதியா்கள் முடிவு!

SCROLL FOR NEXT