திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு அல்வா மற்றும் திருக்குறள் புத்தகத்தை வழங்கி நூதன முறையில் போக்குவரத்து காவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தஞ்சாவூர் போக்குவரத்து காவலர்கள் மற்றும் தனியார் அறக்கட்டளை சார்பில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதேபோல் இன்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை தஞ்சாவூர் அண்ணா சிலை அருகே தடுத்து நிறுத்திய காவலர்கள் அவர்களுக்குத் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தனர்.
தொடர்ந்து தலைக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தி அவர்களுக்கு அல்வா மற்றும் திருக்குறள் புத்தகத்தை வழங்கி நூதன முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.