பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் சென்றவர்கள், மீண்டும் சென்னை திரும்ப வசதியாகக நாகர்கோயில் - தாம்பரம் இடையே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 18ஆம் தேதி நாகர்கோயில் - தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும், சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்குத் தொடங்கும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஜன.18ஆம் தேதி நாகர்கோயில் - தாம்பரம் இடையே ஒரு வழிப் பாதையில் தெற்கு ரயில்வே இயக்கும் இந்த சிறப்பு ரயிலானது, நாகர்கோயிலில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படும். இது ஜன. 19-ஆம் தேதி காலை 4.10 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் விடுமுறை முடிந்து, சொந்த ஊர்களில் இருந்து திங்கள்கிழமை காலை சென்னை திரும்பி, அலுவலகம் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்வோருக்கு வசதியாக இந்த ரயில் இயக்கப்பட விருக்கிறது.
நாகர்கோயிலில் இருந்து நெல்லை, விருதுநகர், மதுரை, திரச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக தாம்பரம் வந்தடைகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.