முகப்பு
தமிழ்நாடு

மீண்டும் அதிகரித்த தங்கம், வெள்ளி விலை.. இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம் பற்றி...

Updated On : 17 ஜனவரி 2026, 9:43 am IST
தங்க நகைக் கடை... - படம்: பிடிஐ
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ. 400 உயர்ந்து விற்பனையாகிறது.

கடந்த 4 நாள்களில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3,120 உயர்ந்திருந்த நிலையில், நேற்று சற்றே ஆறுதல் அளிக்கும் வகையில் குறைந்திருந்தது.

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 13,280-க்கும், சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 1,06,240-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

Advertisement

நேற்று கிராமுக்கு ரூ. 4 குறைந்திருந்த வெள்ளி விலை, இன்று கிராமுக்கு ரூ.4 அதிகரித்து ரூ. 310-க்கும், கிலோவுக்கு ரூ. 4,000 அதிகரித்து ரூ. 3,06,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் கடந்து வந்த பாதை (ஒரு சவரன் விலை)

  • ஜனவரி 17 - ரூ. 1,06,240

  • ஜனவரி 16 - ரூ. 1,05,840

  • ஜனவரி 15 - ரூ. 1,06,320

  • ஜனவரி 14 - ரூ. 1,06,240

  • ஜனவரி 13 - ரூ. 1,05,360

  • ஜனவரி 12 - ரூ. 1,04,960

  • ஜனவரி 11 - ரூ. 1,03,200

summary

In Chennai, the price of gold jewellery rose by Rs. 400 per sovereign on Saturday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.