தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் திமுக அரசு நிறைவேற்றும் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
ஒசூரில் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் கருத்து கேட்புக் கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது கனிமொழி எம்.பி. பேசுகையில், கடந்த தேர்தல் அறிக்கையில் 505 தேர்தல் வாக்குறுதிகளை திமுக வழங்கியது. அதில் 404 வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றியுள்ளது. மத்திய அரசு ஒவ்வொரு நாளும் தமிழக அரசுக்கு இடைஞ்சல் செய்து வருகிறார்கள். அதற்கு இடையிலும் தமிழகத்தை முன்னேறிய மாநிலமாக உருவாக்கி வருகிறோம்.
மத்திய அரசு ஓசூரில் விமான நிலையம் அமைக்க முடியாது என தெரிவித்து வருகின்றனர். ஆனால் முடியாததை முடித்துக்காட்டும் திமுக அரசு. ஓசூரில் விமான நிலையம் அமையும் என நமது தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா இங்கு தெரிவித்துள்ளார். மத்திய அரசு நிதி கொடுக்காவிட்டாலும் எவ்வளவு தடைகளை ஏற்படுத்தினாலும் மீதமுள்ள 101 வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றும். அதனை நிறைவேற்றி காட்டுவோம் என்ற நம்பிக்கையில் உங்களைச் சந்திக்க நாங்கள் வந்துள்ளோம்.
முதல்வர் மு க ஸ்டாலின் மக்களின் கருத்துக்களை அறிந்துகொள்ள தனியாக ஒரு ஆன்லைன் போர்டல் (செயலியை) ஏற்படுத்தி உள்ளார். அதில் மக்கள் தங்கள் தேர்தல் வாக்குறுதிகளில் தெரிவிக்க வேண்டிய கருத்துக்களை தெரிவிக்கலாம். திராவிட முன்னேற்றக் கழக அரசு காலத்துக்கு ஏற்ப தங்களை தகவமைத்து கொண்டு வருகிறது. ஃபேஸ்புக் ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்கள் வருவதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு கருணாநிதி சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்தார்.
அந்த வழியில் ஆன்லைன் போர்டலில் உலகத்தில் எந்த மூளையில் தமிழர்கள் இருந்தாலும் தங்களுடைய கருத்துக்களை அதில் பதிவிடலாம் எனக் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.