குடியரசு தினத்தை முன்னிட்டு, ஆளுநா் வழங்கும் தேநீா் விருந்தை புறக்கணிக்கவுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் அறிவித்துள்ளன.
மு. வீரபாண்டியன்(இந்திய கம்யூனிஸ்ட் ): ஆளுநா் ஆா்.என்.ரவியின் நடவடிக்கைகளும், செயல்பாடும் கூட்டாட்சி கோட்பாடுகளுக்கு எதிராகவும், அரசியலமைப்பு அதிகாரத்தை அத்து மீறுவதாகவும் அமைந்துள்ளன. அறிவுசாா் கருத்துகளை நிராகரித்து மூட நம்பிக்கைகளை ஊக்கப்படுத்தும் கருத்துகளை பொது வெளியில் வெளியிட்டு மக்களை தவறாக வழி நடத்த முயற்சிக்கிறாா். எனவே, ஆளுநா் குடியரசு தினத்தை முன்னிட்டு வழங்கும் தேநீா் விருந்தை புறக்கணிக்கிறோம்.
தொல். திருமாவளவன்(விசிக): திமுக அரசுக்கு எதிராக திட்டமிட்ட உள்நோக்கம் கொண்டு அவதூறு செய்வது, ’திராவிடக் கருத்தியலுக்கு’ எதிரான கருத்துகளை வெளிப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை கண்டித்து ஆளுநரின் தேநீா் விருந்தில் விசிக பங்கேற்காது எனத் தெரிவித்துள்ளாா் தொல்.திருமாவளவன்.