தேசிய ஜனநாயகக் கூட்டணியால் திமுக தோற்கடிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடியும் பங்கேற்று உரையாற்றவுள்ளார்.
இந்த நிலையில், மத்திய அமைச்சரும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல், செய்தியாளருடன் பேசுகையில் "திமுக அரசு மிகவும் மோசமாக செயல்பட்டு வருகிறது. இது ஒரு வாரிசு அரசியல்; ஊழல் மற்றும் திறமையற்ற அரசு.
இக்கட்சியில்தான் தேச விரோதி உதயநிதி ஸ்டாலின் போன்ற தலைவர்கள் உள்ளனர். ஊழல் மற்றும் வளர்ச்சிக்கு எதிரான சக்திகளைத் தோற்கடிக்க மக்கள் முடிவெடுத்துள்ளன்ர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியால் திமுக அரசு தோற்கடிக்கப்படும்" என்று தெரிவித்தார்.
முன்னதாக, கூட்டத்தில் பங்கேற்கவுள்ள பிரதமர் மோடி, தனது எக்ஸ் பக்கத்தில் ஊழல் திமுக அரசுக்கு விடைகொடுக்கும் காலம் வந்துவிட்டதாக பதிவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.