எடப்பாடி பழனிசாமி - முதல்வர் ஸ்டாலின் கோப்புப் படம்
தமிழ்நாடு

காவல் துறையை தன்னிச்சையாக செயல்பட அனுமதிக்காத முதல்வர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கண்டனம்

காவல் துறையை தன்னிச்சையாக செயல்பட அனுமதிக்காத முதல்வர் ஸ்டாலினுக்கு அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கண்டம் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திச் சேவை

காவல் துறையை தன்னிச்சையாக செயல்பட அனுமதிக்காத முதல்வர் ஸ்டாலினுக்கு அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கண்டம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், தமிழக சட்டமன்றத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் தன் முதுகை தானே தட்டிக்கொண்டு பெருமை பேசி வந்த நேரத்தில், திருச்சி சென்னை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பெரம்பலூர் சுங்கச்சாவடி அருகே காவல்துறை வாகனம் ஒன்றின் மீது மர்ம நபர்கள் சிலர் நாட்டு வெடிகுண்டுகளை வீசியிருக்கிறார்கள்.

பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட மதுரையைச் சார்ந்த வெள்ளை காளி என்ற ரௌடியை காவலர்கள் விசாரணைக்காக அழைத்து செல்லும் போது இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இந்த வெடிகுண்டு வீச்சில் ரௌடியின் பாதுகாப்பிற்காக வந்த 4 காவலர்கள் படுகாயமடைந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.

குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு காவல்துறையை பார்த்தோ, இந்த அரசை பார்த்தோ கிஞ்சித்தும் அச்சமில்லை என்ற நிலைதான் நிலவுகிறது.

சட்டம் ஒழுங்கை சந்தி சிரிக்க வைக்கும் நிலையில், ஆட்சி சக்கரத்தை ஏனோ தானோ என்று சுழற்றி வரும் முதல்வர் ஸ்டாலின் இந்த சம்பவத்திற்கு யார்மீது பழிபோடப் போகிறார் என்று தெரியவில்லை. காவல்துறையை தன்னிச்சையாக செயல்பட அனுமதிக்காத முதல்வர் ஸ்டாலினை வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

AIADMK General Secretary Edappadi Palaniswami has condemned Chief Minister Stalin for not allowing the police department to act arbitrarily.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரானிலிருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் இந்திய மாணவர்கள்: அரசு உதவ கோரிக்கை!

சத்தீஸ்கரில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கை: வெடிபொருட்கள், ஜெலட்டின் குச்சிகள் மீட்பு

இந்தியா மீதான 25% கூடுதல் வரி நீக்கப்படும்? - அமெரிக்கா சூசகம்!

யு19 உலகக் கோப்பை: நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

ஹரியாணா: 50 வரை எண்ணத் தெரியாத 4 வயது மகளை அடித்துக்கொன்ற தந்தை கைது

SCROLL FOR NEXT