கிருஷ்ணகிரியில் குடியரசு நாள் விழா திங்கள்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ்குமார் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் காவல்துறையின் மரியாதையையும் அவர் ஏற்றார்.
தொடர்ந்து, பல்வேறு அரசுத் துறைகள் சார்பில் 53 பயனாளிகளுக்கு ரூ.2.51 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனையடுத்து சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் சமாதனப் புறாக்களையும் ஆட்சியர் பறக்க விட்டார்.
பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு சான்றிதழையும் அவர் வழங்கினார். சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவரது வாரிசுதாரர்களைக் கௌரவித்து நினைவுப் பரிசுகளை வழங்கினார்.
இந்த விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் சாதனை குறள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.