காஞ்சிபுரத்தில் குடியரசு நாள் விழா கொண்டாட்டம்!
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு நாள் விழா.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் குடியரசு நாள் விழாவை ஒட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.
பல்வேறு துறைகளின் கீழ் 93 பயனாளிகளுக்கு 36 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.
குடியரசு நாள் விழா காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்க திடலில் நடைபெற்றது.
Advertisement
Advertisement
குடியரசு நாள் விழாவை ஒட்டி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி விட்டு, காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
பின்னர், முவர்ண பலூன்களையும் வெள்ளை புறாக்களையும் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் பறக்கவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, பல்வேறு துறைகளின் கீழ் 93 பயனாளிகளுக்கு ரூ. 36 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினர் மற்றும் அரசு அலுவலர்களுக்கு, சான்றிதழ்களையும் வழங்கி கெளரவித்தார்.
குடியரசு நாள் விழா நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகம், மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் ஆர்த்தி, காஞ்சிபுரம் சப் கலெக்டர் ஆஷிக் அலி மற்றும் அனைத்துத் துறை உயர் அதிகாரிகளும் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
In Kanchipuram, on the occasion of Republic Day, District Collector Kalaiselvi Mohan hoisted the national flag at the District Collector's office and accepted the parade salute from the police force.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.