புதுக்கோட்டையில் கொடியேற்றிய ஆட்சியர் அருணா. 
தமிழ்நாடு

குடியரசு நாள்: புதுக்கோட்டையில் ஆட்சியர் அருணா கொடியேற்றினார்!

புதுக்கோட்டையில் கொடியேற்றிய ஆட்சியர் மு. அருணா.

இணையதளச் செய்திப் பிரிவு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆயுதப்படைத் திடலில் திங்கள்கிழமை நடைபெற்ற குடியரசு நாள் விழாவில், மாவட்ட ஆட்சியர் மு. அருணா தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

தொடர்ந்து பல்வேறு துறைகளின் சார்பில் 47 பயனாளிகளுக்கு ரூ. 32.11 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளையும், பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 391 பேருக்குப் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார்.

காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதை

விழாவில், பள்ளி, கல்லூரி மாணவர்கள் 852 பேர் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நிகழ்ச்சியில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ. ராஜராஜன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் தி்ட்ட இயக்குநர் பா. ஜெயசுதா, மாநகராட்சி ஆணையர் த, நாராயணன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் புதுக்கோட்டை மண்டல அலுவலகத்தில், மண்டலப் பொதுமேலாளர் க. முகமது நாசர் கொடியேற்றி வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கூ. சண்முகம் கொடியேற்றி வைத்தார்.

At the Republic Day celebrations held on Monday at the Armed Forces parade ground on behalf of the Pudukkottai district administration, District Collector M. Aruna hoisted the national flag and accepted the parade salute from the police personnel.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடியரசு நாளை முன்னிட்டு 1 லிட்டர் பெட்ரோல் ரூ. 50-க்கு விற்பனை!

தேசியக் கொடியேற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி

தில்லி கடமைப் பாதையில் தமிழகத்தின் அலங்கார ஊர்தி! சிறப்பம்சங்கள் என்ன?

திருவாரூர் மாவட்டத்துக்கு ஜன. 28-ல் உள்ளூர் விடுமுறை!

பேட்ரியாட் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT