திமுக அரசு ஒரேயொரு குடும்பத்துக்கானது மட்டுமே என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுடன் நயினார் நாகேந்திரன் பேசுகையில் "தமிழக பாஜகவை பொருத்தவரையில், தமிழுக்கு நிச்சயமாக முக்கியத்துவம் கொடுக்கும். ஆனால், இன்னும் மொழியை வைத்தே ஆட்சி செய்யலாம் என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்களே தவிர, மக்கள் மீது அவர்களுக்கு நம்பிக்கையில்லை. அவர்கள் மக்களாட்சியும் செய்யவில்லை.
அந்த காலத்திலிருந்தே, வெறும் மொழியைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கின்றனர். இன்றைக்கு இவ்வளவு படுகொலைகள், பாலியல் வன்கொடுமைகள், போதைப் பொருள்கள் பயன்பாடு நடந்து கொண்டிருக்கின்றன. இவற்றைப் பற்றி கனிமொழி பேசுவதில்லை.
1949-லிருந்து இந்தக் காலம்வரையில், தமிழ் தமிழ் என்று பேசிக் கொண்டிருந்தால் மட்டும் போதுமா? மக்கள் நலன் காக்க வேண்டாமா? மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்துகொடுக்க வேண்டாமா?
தமிழ்நாட்டுக்கு 11 வந்தே பாரத் ரயில்கள், 11 மருத்துவக் கல்லூரிகள் என பிரதமர் மோடி ரூ. 14 லட்சம் கோடி தந்துள்ளார். ஆனால், இவர்களின் 5 ஆண்டுகால ஆட்சியில் ஒரு மருத்துவக் கல்லூரியைக்கூட கொண்டுவரவில்லை. எந்த முன்னேற்றமும் இவர்கள் கொண்டுவரவில்லை.
முதல்வரின் காவல்துறை தோல்வியுற்ற காவல்துறை; அரசும் தோல்வியுற்ற அரசு.
இந்த அரசு மக்களுக்கானது அல்ல; இது ஒரேயொரு குடும்பத்துக்கானது மட்டுமே" என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.