முகப்பு
தமிழ்நாடு

புதுக்கோட்டை: கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல இன்றுமுதல் தடை; மீறினால் நடவடிக்கை

புதுக்கோட்டையில் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லத் தடை குறித்து...

Updated On : 4 ஜூலை 2026, 8:45 am IST
புதுக்கோட்டையில் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லத் தடை - பிரதிப் படம்
பகிர்:

வங்கக் கடலில் காற்றின் வேகம் காரணமாக புதுக்கோட்டையில் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தெற்கு குஜராத்திலிருந்து கா்நாடகம் வரை காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. மேலும், வடக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கதேச பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுவதால், வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் காற்றழுத்த தாழ்வு பகுதி வாக்கில் உருவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் விளைவாக கோவை, நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (ஜூலை 4) இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், வங்கக் கடலில் காற்றின் வேகம் இருப்பதாகக் கூறி, புதுக்கோட்டை மாவட்ட விசைப் படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் இன்று (ஜூலை 4) முதல் மறு உத்தரவு வரும்வரையில் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத் துறை தடை விதித்துள்ளது.

மேலும், தடையை மீறி கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மீன்வளத் துறை எச்சரித்துள்ளது.

summary

Ban on fishing at sea in Pudukkottai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments