முகப்பு
தமிழ்நாடு

சென்னை தரையிறங்கிய விமானத்தில் அவசரகால கதவைத் திறந்த பயணி கைது

சார்ஜாவில் இருந்து சென்னை வந்த பயணிகள் விமானம் தரையிறங்கும் போது அதன் அவசர கால கதவை திறந்த பயணி கைது செய்யப்பட்டுள்ளார்.

விமானம் - கோப்புப்படம்.
பகிர்:

சார்ஜாவில் இருந்து சென்னை வந்த பயணிகள் விமானம் தரையிறங்கும் போது அதன் அவசர கால கதவை திறந்த பயணி கைது செய்யப்பட்டுள்ளார்.

231 பயணிகளுடன் ஏர் அரேபியா விமானம் ஷார்ஜாவிலிருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தது. விமானம் ஓடுபாதையில் தரையிறங்கியபோது அதன் அவசர கால கதவுகளில் ஒன்றை புதுக்கோட்டையைச் சேர்ந்த 34 வயது இளைஞர் திறந்தார்.

உடனடியாக விமானத்தை நிறுத்தி அதிகாரிகளுக்கு விமானி தகவல் தெரிவித்தார். வெடிகுண்டு நிபுணர்கள், ஆயுதமேந்திய அதிகாரிகள் உள்ளிட்ட மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் விமானம் நின்ற இடத்திற்கு விரைந்தனர். இச்சம்பவம் குறித்து அதிகாரிகளிடம் விமானி முறைப்படி புகார் அளித்தார்.

Advertisement

பாதுகாப்புப் படை வீரர்கள் விமானத்தில் ஏறி, அந்தப் பயணியைக் கைது செய்து காவலில் எடுத்தனர். அதிகாரிகள் அந்தப் பயணியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரது மனநிலையும் மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் சற்று பரபரப்பு நிலவியது.

summary

Tension prevailed for a while when a passenger opened one of the emergency exit doors while the flight was taxiing at Chennai International Airport.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.