முகப்பு
தமிழ்நாடு

பெரம்பூரில் விஜய் வெற்றி! திருச்சி கிழக்கிலும் முன்னிலை!

பெரம்பூரில் தவெக தலைவர் விஜய் வெற்றி பெற்றுள்ளது பற்றி...

தவெக தலைவர் விஜய்
பகிர்:

தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். திருச்சி கிழக்கு தொகுதியிலும் விஜய் முன்னிலையில் இருந்து வருகிறார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வரும் நிலையில் மாலை 4 மணி நிலவரப்படி தவெக - 107, திமுக - 75, அதிமுக - 52 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. ஆட்சியமைக்க 117 தொகுதிகள் பெரும்பான்மை தேவை.

முதல் தேர்தலிலேயே தவெக மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

Advertisement

தவெக தலைவர் விஜய், பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். 44,928 வாக்குகள் வித்தியாசத்தில் விஜய் வெற்றி பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் முன்னிலையில் இருந்து வருகிறார். திருச்சி கிழக்கில் 17,733 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

திருச்சி கிழக்கில் விஜய் தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

summary

TN election results 2026: TVK vijay won in perambur, leading in trichy east

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.