FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் முன்னிலையில் சதமடித்த தவெக! விஜய் வீட்டுக்குப் பாதுகாப்பு அதிகரிப்பு

தமிழ்நாட்டில் தவெக 100 இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில் தவெக தலைவர் விஜய் வீட்டுக்குப் பாதுகாப்பு அதிகரிப்பு

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய். - படம்: எக்ஸ்.
பகிர்:

சென்னை: தமிழ்நாட்டில் 100 தொகுதிகளில் தவெக முன்னிலையில் உள்ள நிலையில் விஜய் வீட்டுக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியதிலிருந்தே பல இடங்களில் தவெக முன்னிலைக்கு வந்தது.

Advertisement

Advertisement

தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் தவெக 57 இடங்களிலும் அதிமுக 48 தொகுதிகளிலும் திமுக 27 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.

ஆனால், பொதுவாக காலை 10 மணி நிலவரப்படி தவெக - 100 இடங்களிலும் அதிமுக 81 இடங்களிலும் திமுக 51 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

இதையடுத்து சென்னையில் உள்ள நடிகரும் தவெக தலைவருமான விஜய் வீட்டுக்கு காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

விஜய் வீட்டைச் சுற்றிலும் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தபால் வாக்குகள் தொடங்கி பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முதல் சுற்று நிலவரம் வெளியாகியிருக்கிறது.

summary

Security increased at TVK leader Vijay's house as TVK is leading in 100 seats in Tamil Nadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments