பெரும்பான்மையை பேரவையில்தான் நிரூபிக்க வேண்டும், ஆளுநர் மாளிகை அல்ல! காங்கிரஸ்
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி சட்டப்பேரவையில்தான் பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் பேச்சு
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி சட்டப்பேரவையில்தான் பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்காக, விஜய்க்கு அழைப்பு விடுக்கக் கோரி ஆளுநருக்கு பல்வேறு கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும், பெரும்பான்மையை நிரூபித்தால் மட்டுமே ஆட்சியமைக்க முடியும் என விஜய்யிடம் ஆளுநர் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டார்.
இந்த நிலையில், ஆளுநரின் மறுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, "சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த அரசியல் கூட்டணிக்கும் அல்லது அரசியல் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால், ஆளுநரின் கடமை என்ன?
Advertisement
Advertisement
சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் முதன்மைக் கட்சியின் தலைவரை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்.
இது தான் அரசியல் விதி. இதுதான் நாடாளுமன்ற மரபு.
அந்தக் கட்சியின் தலைவர் தனக்குப் பெரும்பான்மை ஆதரவு இருக்கிறது என்று நிரூபிக்க வேண்டிய களம் சட்டப்பேரவை; ஆளுநர் மாளிகை அல்ல. இது தான் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு: 1994 (3) எஸ்சிசி 1.
இந்த விதியை விளக்கி வலியுறுத்திய தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளை நான் பாராட்டுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
Congress leader P. Chidambaram states that, in accordance with the Supreme Court verdict, the majority must be proven within the Legislative Assembly
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.