முகப்பு
தமிழ்நாடு

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி

கோவை சிறுமி கொலை குறித்து மேற்கு மண்டல ஐ.ஜி. ரம்யா பாரதி விளக்கம்...

குற்றவாளி கார்த்தி | மோகன் ராஜ் - X
பகிர்:

கோவையில் கொலை செய்யப்பட்ட சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளது பிரேத பரிசோதனையில் உறுதியாகியுள்ளதாக மேற்கு மண்டல ஐ.ஜி. ரம்யா பாரதி கூறினார்.

இதுபற்றி செய்தியாளர்களுடன் விளக்கமளித்த ஐ.ஜி. ரம்யா பாரதி,

"மே 21 ஆம் தேதி காணாமல் போனதாக இரவு 8.30 மணியளவில் பள்ளபாளையம் காவல் நிலையத்திற்கு புகார் வந்தது. அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்து 5 தனிப்படைகளை அமைத்து தேடினோம். 250 சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

வாசலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை ஆசை வார்த்தை கூறி, பக்கத்து வீட்டுக்காரரான நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கார்த்தி(33) கடத்தியுள்ளது தெரிய வந்தது. அவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கண்ணம்பாளையம் குளம் அருகே உள்ள தென்னந்தோப்பில் வைத்து கொலை செய்துள்ளார்.

பின்னர் தலைமறைவாக இருந்த கார்த்தி கைது செய்யப்பட்டுள்ளார். தப்பிக்க முயன்ற போது காலில் அடிபட்டுள்ளதால் கோவை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார். கார்த்தி ஏற்கெனவே திருமணமாகி மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

கார்த்திக்கு துணையாக இருந்த அவரது நண்பர் மோகன் ராஜும் கைது செய்யப்பட்டுள்ளார். இருவரும் கூலித் தொழிலாளிகள்.

சிறுமியின் குடும்பத்தினருடன் சேர்ந்து குற்றவாளி கார்த்தியும் சிறுமியைத் தேடியுள்ளார். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ளது பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

குற்றவாளிகள் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகள் 24 மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

summary

Coimbatore Girl Sexually Assaulted and Murdered: IG Interview

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.