தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களின் அறைக்கு போலீஸ் பாதுகாப்பு! இதுவே முதல்முறை...
தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களின் அறைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது பற்றி...
தலைமைச் செயலகத்தில் இதுவரை இல்லாத நடைமுறையாக அமைச்சர்களின் அறைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முதல்வர் விஜய் தலைமயிலான தவெக அரசு பொறுப்பேற்று பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இதனிடையே தமிழகத்தில் இதுவரை இல்லாத நடைமுறையாக தலைமைச் செயலகத்தில் உள்ள ஒவ்வொரு துறை சார்ந்த அமைச்சரின் அறைக்கும் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒவ்வொரு அமைச்சரின் அறைக்கும் 2 முதல் 4 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
முன்னெப்போதும் இல்லாத வகையில் அமைச்சர்களைச் சந்திக்க தவெகவினர் அதிகம் வருவதால் இந்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.