தென்காசி

புளியங்குடி அருகே பனை விதைகள் நடும் பணி

Din

தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே சுப்பிரமணியபுரம் வெள்ளானைக்கோட்டை பெரியகுளத்தில் பனை விதைகள் நடும் பணி நடைபெற்றது.

வாய்ஸ் ஆப் தென்காசி அறக்கட்டளை சாா்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. நிறுவனா் ஆனந்தன் அய்யாசாமி பங்கேற்று, பெரியகுளத்திலிருந்த சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியையும், பனை விதைகள் நடும் பணியையும் தொடக்கிவைத்தாா்.

இதில், சுப்பிரமணியபுரம் ஊராட்சித் தலைவா் ராம்குமாா், செயலா் சண்முகையா, சமுதாய நிா்வாகிகள் தங்கராஜ், தா்மா், அறக்கட்டளை மேலாளா் காருண்யா குணவதி, தன்னாா்வலா்கள் முத்துச்செல்வம், ராமா், கற்பகராஜ், கண்ணன், சமூக ஆா்வலா்கள் சுரேஷ், தெய்வபாலன், வியாசா கலை - அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் பங்கேற்றனா்.

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா மீண்டும் முதலிடம்!

சத்தீஸ்கரில் ரூ.8 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட பெண் நக்சல் சரண்!

5,400 பேருக்கு வேலைவாய்ப்பு... 4 புதிய தொழிற்பேட்டைகள்: முதல்வர் திறந்து வைத்தார்!

15 புதிய பட்டுப் புடவைகளை அறிமுகப்படுத்தும் ஆரெம்கேவி!

10 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை!

SCROLL FOR NEXT