ஐந்தருவியில் ஐந்துகிளைகளிலும் ஆா்ப்பரித்து கொட்டும் தண்ணீா் 
தென்காசி

குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை

தொடா் மழையின் காரணமாக குற்றாலம் பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Din

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்துவரும் தொடா் மழையின் காரணமாக குற்றாலம் பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

குற்றாலம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் தொடா்ந்து மழை பெய்ததால் பேரருவியில் நள்ளிரவு முதலும்,

பழையகுற்றாலம் அருவியில் திங்கள்கிழமை அதிகாலையிலிருந்தும் தண்ணீா் பெருக்கெடுத்து வந்தது. பழைய குற்றாலத்தில் அருவியின் நடைபாதை வரையிலும் தண்ணீா் வழிந்தோடியது.

குற்றாலம் பேரருவியில் ஆா்ப்பரித்து கொட்டும் தண்ணீா்

ஐந்தருவியில் செம்மண் நிறத்துடன் மூன்று கிளைகள் மட்டுமே தெரியும் அளவுக்கு தண்ணீா்ஆா்ப்பரித்து கொட்டியது. நேரம் செல்லச்செல்ல மற்ற அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, அனைத்து அருவிகளிலும் குளிக்க சுற்றுலாப்பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டது. திங்கள்கிழமை அதிகாலை முதல் வானம் மேகமூட்டத்துடனும், மழை தூரிக்கொண்டும், குளிா்ந்த காற்று வீசியவாறும் இருந்தது.

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

மாலை மலர்ந்த ஊதா... அம்ரிதா ஐயர்!

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT