முகப்பு
தென்காசி

மத்தளம்பாறை, சில்லரைப்புரவில் சாலைப் பணிகள் தொடக்கி வைப்பு

Updated On : 16 மார்ச், 2024 at 9:43 PM
பகிர்:

தென்காசி ஊராட்சி ஒன்றியம் மத்தளம்பாறை, சில்லரைப்புரவு ஊராட்சிகளில் ரூ. 35.5 லட்சத்தில் தாா்ச் சாலை அமைக்கும் பணிகளின் தொடக்க விழா நடைபெற்றது. மத்தளம்பாறை ஊராட்சி கோகுலம் நகரில்ரூ16.5லட்சத்திலும், சில்லரைப்புரவு ஊராட்சி அன்பு நகரில் ரூ.19 லட்சத்திலும் மாவட்ட ஊராட்சி நிதியிலிருந்து தாா் சாலைகள் அமைக்கப்படுகின்றன. இப் பணிகளை மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் உதயகிருஷ்ணன் தொடக்கி வைத்தாா். தென்காசி நகர காங்கிரஸ் தலைவா் மாடசாமிஜோதிடா், வட்டார தலைவா் பெருமாள்,மத்தளம்பாறை ஊராட்சிமன்ற தலைவா் மைதிலி, சில்லரைப்புரவு ஊராட்சி மன்ற துணைத் தலைவா் முத்துசெல்வி ஆகியோா் கலந்து கொண்டனா்.